Saturday, December 11, 2010

Wednesday, December 8, 2010

கருணாநிதியின் ஊழல் வாரிசு- ஆ.ராசா!?

இந்திய ஊழலின் இதயத்தில் பொறுத்தமற்ற மனிதர்
இப்படித்தான் நியூயார்க் டைம்ஸ் ஆண்டிமுத்து ராசாவை வர்ணிக்கிறது. இன்று நியூயார்க் டைம்ஸ்.

ஒரு சாதாரண ஊரில் உள்ள ஒரு தென்னிந்திய மாநிலத்தின் பிராந்தியக் கட்சியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர்.   எப்படிப் பார்த்தாலும் தொலைத் தொடர்புத் துறையிலோ தொழில் வணிகத்திலோ சிறிதும் அனுபவம் இல்லாத ஒரு நபர் மிக வேகமாக வளர்ந்து வரும் செல் பேசி சந்தையை நிர்வகிக்கும் அமைச்சராவார் என்பதை யாரும் எதிர்ப்பார்க்க வில்லை.

ஆனால் அவரிடம் என்ன தேவையோ அது இருந்தது. காங்கிரசின் மிக முக்கிய கூட்டணிக் கட்சித் தலைவரின் எக்கு போன்ற பின்புலம் அவருக்கு இருந்தது. இவருடைய 16 உறுப்பினர்களின் ஆதரவு இல்லையென்றால், அலைபாயும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு அமைக்கப் பட்டிருக்கும் அரசு நிலைகுலையும்.

இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழல் என்று வர்ணிக்கப் படும் ஊழலின் மையப் புள்ளியாக ராசா உள்ளார்.   அவர் தனது பதவியை பயன்படுத்தி விலை மதிப்புள்ள செல்பேசியின் ஸ்பெக்ட்ரம் லைசென்சுகளை 2008ம் ஆண்டில் அடி மாட்டு விலைக்கு விற்றார் என்பதுதான் அவர் குற்றச் சாட்டு. இது தொடர்பாக அவர் எடுத்த முடிவுகள் ஏறக்குறைய இந்திய கஜானாவுக்கு 40 பில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்படுத்தியிருக்கும் என்று கடந்த வாரம் இந்தியாவில் வெளியான ஒரு புலனாய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்பாக வெளியான இரண்டு முக்கிய அரசியல் ஊழல்களை அடுத்து இந்த ஊழல் வெளியாகியிருப்பது இந்திய அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை அரித்துவிட்டிருக்கிறது.   பரவலாக மிக நேர்மையான மனிதர் என்று அறியப்படும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மீது இந்த விஷயத்தை துரிதமாக புலனாய்வு செய்யாததற்காக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதாரத்தின் அடித்தளத்தை இந்த ஊழல் ஆட்டம் காண செய்யும்.
ஒரு சாதாரண சிற்றூர் அரசியல்வாதியாக இருந்த ராசா இந்தியாவின் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ஆக முடிந்தது உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அரசியல் எப்படி வேலை செய்கிறது என்பதை புரிந்து கொள்ள உதவும். சாதி அடிப்படையிலோ, குடும்ப அடிப்படையிலோ உருவாகும் சிறிய பிராந்திய கட்சிகள் இந்தியாவில் மிகப் பெரிய சக்தியாக விளங்கி அரசு இயந்திரத்தின் வலுவான பாகங்களை ஆக்ரமித்து தங்கள் கட்சி மற்றும் சொந்த கஜானாக்களை நிரப்பிக் கொள்கின்றன.
பல கட்சி கூட்டணி ஆட்சி என்றாலே, கொள்கைப் பிடிப்பு இல்லாத சிறிய கட்சிகளின் நடவடிக்கைகளை கண்டும் காணாமல் இருக்க வேண்டியதுதான் என்கிறார், அரசியல் நோக்கர் ப்ரேம் ஷங்கர் ஜா.
1989ம் ஆண்டு ராணுவ பேரங்கள் தொடர்பாக நடைபெற்ற ஊழல் காரணமாக தோல்வியை சந்தித்த ராஜிவ் காந்தி அரசாங்கத்துக்குப் பிறகு பாராளுமன்றத்தில் முழுப் பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதன் விளைவாக சிறிய, பிராந்திய கட்சிகளின் துணையோடு அரசு அமைப்பது என்பது, ஒரு சிக்கலான விவகாரமாகவே அமைகிறது. இது போன்ற பிராந்தியக் கட்சிகளுக்கு தேசிய அளவில் கொள்கை ஏதும் இல்லாமல் மத்தியில் கிடைக்கும் அதிகாரத்தை கொள்ளையடிப்பதற்கான வாய்ப்பாகவே பார்க்கின்றன.
காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான ஊழல்களுக்கு பஞ்சமே இல்லை.   ஆனாலும் அரசின் முக்கிய துறைகளான உள்நாட்டு பாதுகாப்பு, வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, நிதித் துறை போன்ற துறைகளை நீண்ட அனுபவம் மற்றும் சிறந்த தலைவர்களிடம் கொடுத்துள்ளது. ஆனால் கூட்டணி அரசாங்கத்தின் யதார்த்தம் பெரிய துறைகளை சிறிய கூட்டணிக் கட்சிகளிடம் கொடுத்து, அது கேள்விக்குள்ளாகும் அரசியல்வாதிகளை முக்கிய பதவிகளில் அமர்த்துவதில் போய் முடிகிறது.
இந்த கூட்டணி அரசியல் மிக தர்மசங்கடமான ஊழல்களுக்கும், நிர்வாக சீர்கேடுகளுக்கும் கடந்த காலத்தில் வழி வகுத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சி தலைவராகவும், மத்திய நிலக்கரித் துறை அமைச்சராகவும் இருந்த கிழக்கு மாநிலம் ஜார்கண்டைச் சேர்ந்த ஷிபு சோரேன் என்பவர் 2006ல் ஒரு கொலை வழக்கில் தண்டிக்கப் பட்டதற்காக பதவி விலக நேரிட்டது.   மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்டுகளை தோற்கடித்து தனது கட்சியான திரிணாமூல் காங்கிரசை பதவியில் அமர்த்துவதையே ஒரே லட்சியமாகக் கொண்ட மம்தா பானர்ஜியின் கையில் தான் இந்தியாவின் மிகப் பெரிய வேலை வழங்கும் நிறுவனமான இந்தியன் ரயில்வே இருக்கிறது.
திமுக என்கிற ராசாவின் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு காலத்தில் தமிழ் தேசியம் பேசுகிற விடுதலை இயக்கமாக இருந்து வந்தது. ஆனால், தனது கொள்கைகளை ஏறக்குறைய அந்த கட்சி கைவிட்டு விட்டது. எண்பதுகளில் உள்ள, சக்கர நாற்காலையை நம்பியுள்ள மு.கருணாநிதி மற்றும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் அவரது வாரிசுகள் திமுகவை ஒரு அரசியல் கட்சியாக இல்லாமல் குடும்ப தொழில் சாம்ராஜ்யமாக நடத்துவதாகவே தெரிகிறது.
2004ல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்த போது, அதன் எதிரியான பிஜேபியின் கூட்டணிக் கட்சியாக இருந்த திமுக காங்கிரஸ் அணிக்கு வந்தது. இதற்கு பலனாக திமுகவுக்கு தொலைத் தொடர்புத் துறை போன்ற பல்வேறு துறைகள் வழங்கப் பட்டன.
கருணாநிதியின் கொள்ளுப் பேரனும் மீடியா ஜாம்பவானுமான தயாநிதி மாறனை தொலைத் தொடர்புத் துறை அமைச்சராகுமாறு டெல்லிக்கு அனுப்பினார் கருணாநிதி. ஆனால் மாறனுக்கும் கருணாநிதியின் மூத்த மகனுக்கும் முட்டிக் கொண்டது.

குடும்பச் சண்டையை சரிக் கட்டுவதற்காக மாறனுக்கு பதிலாக அவ்வளவாக பிரபலமாக இல்லாத ஆனால் கட்சியில் மிகப் பெரிய அதிகார மையமாக உள்ள தனது மகள் கனிமொழியோடு நெருக்கமான உறவு கொண்டுள்ள ராசாவை தேர்ந்தெடுத்தார்.

ராசா கல்லூரி நாட்களிலேயே அரசிசியலில் ஈடுபட்டவர். இவர் இதற்கு முந்தைய அரசாங்கத்திலும் அமைச்சராக இருந்தார்.   தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்படும் தலித் சமூகத்தை சேர்ந்த முக்கியமான அரசியல்வாதியாக டெல்லி வட்டாரத்தில் அறியப்பட்டதோடு மட்டுமல்லாமல், அவருக்கு பெரிய பதவி கொடுப்பதால் தலித் வாக்குகளை பெற முடியும் என்றும் நம்பப் பட்டது.
“அவர் யாருக்கும் அச்சுறுத்தல் அல்ல, அதுவே அவருடைய பலம் மற்றும் பதவிக்கான தகுதி“ என்கிறார் தமிழ்நாடு அரசியலை பற்றி ஏராளமாக எழுதியவருமான வாசந்தி.
கட்சியை கவனமாக பொறாமை உணர்வோடு பரம்பரைச் சொத்து போல பாதுகாத்து வரும் கருணாநிதியின் பிள்ளைகளுக்கு வேண்டுமானால் ராசா அச்சுறுத்தல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் ஸ்பெட்ரம் விற்பனையை கையாண்ட விதம், இந்தியாவின் சிறந்த அரசாங்கம் என்று கருதப்பட்ட ஒரு அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை குலைத்து விட்டது.
இந்த ஊழல், இந்தியாவின் சிறந்த அரசியல்வாதிகளுள் ஒருவர் என்று கருதப்படும் மன்மோகன் சிங் மீது கூட கரி பூசி விட்டது.   யாருமே சிங் ஊழலில் சம்பந்தப்பட்டவர் என்று குறை சொல்லாவிட்டாலும் கூட, கடந்த வாரம் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை ராசா கையாண்ட விதம் குறித்து விசாரணை கோரிய ஒரு மனுவை தாமதப் படுத்தியதற்காக குறை கூறியது.
யாராக இருந்தாலும் தண்டனை நிச்சயம் என்று மன்மோகன் சிங் உறுதி கூறியிருந்தாலும், உடனடியாக ராசாவை பதவி நீக்கம் செய்ய ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி, காங்கிரஸ் கட்சி பதவியையும் கூட்டணியையும் காப்பாற்றுவதற்காக எந்த கொள்கையை வேண்டுமானாலும் தியாகம் செய்ய தயாராக இருக்கும் என்ற முடிவை எடுக்க வைக்கிறது.
நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று ராசா கூறினாலும் நவம்பர் 14 அன்று ராஜினாமா செய்தார். இந்தியாவின் சிபிஐ புலனாய்வை மேற்கொண்டு வருகிறது.







Saturday, November 20, 2010

திசை திருப்ப முயல்கிறார் கருணாநிதி: புரட்சிதலைவிஅம்மா குற்றச்சாட்டு

சென்னை, நவ. 18: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் மக்களை திசைதிருப்பும் முயற்சியில் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சிதலைவிஅம்மா  குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து  புரட்சிதலைவிஅம்மா  வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறும் கணக்கு தணிக்கை அறிக்கை அனுமானத்தின் அடிப்படையிலானது. அதன் அடிப்படையில் இறுதித் தீர்ப்பை எழுத முயல்வது முறைதானா என்று கருணாநிதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.இழப்பின் மதிப்புதான் அனுமானம்; இழப்பு அனுமானம் அல்ல. அதாவது, |1 லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடி இழப்பு என்பது, |1 லட்சத்து 50 ஆயிரம் கோடியாகவோ அல்லது |2 லட்சம் கோடியாகவோ இருக்கலாம். ஆனால், இழப்பே ஏற்படவில்லை என்று கூற முடியாது. 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் |10 ஆயிரம் கோடி மட்டுமே. ஆனால், 3-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மூலம் |1 லட்சம் கோடிக்கும் மேல் அரசுக்கு கிடைத்துள்ளது. எனவே, லட்சக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு என்பது அனுமானத்தின் அடிப்படையில் அல்ல என்பதை கருணாநிதிக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட குறைகளுக்காக நான் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தேனா என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.  மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளில் உள்ள குறைகளை தணிக்கைத் துறை சுட்டிக்காட்டுவது வழக்கமானதுதான். இவை அரசுகளின் மீது கூறப்படும் பொதுவான குறைபாடுகள். அதற்காக எந்த முதல்வரும் ராஜிநாமா செய்ய மாட்டார்கள்.2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தைப் பொருத்தவரை, முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை கடுமையாக சாடியிருக்கிறது. பிரதமரின் கருத்து நிராகரிக்கப்பட்டது; சட்ட அமைச்சகத்தின் ஆலோசனை புறக்கணிக்கப்பட்டது;  கடுமையான எதிர்ப்பையும் மீறி முதலில் வருபவருக்கு முதலில் என்ற கொள்கையை கடைப்பிடித்ததன் நோக்கம்; அதையும் சரியாக கடைப்பிடிக்காதது முதலானவை தொடர்பாக தணிக்கை அறிக்கையில் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இவையனைத்தும் ஆ.ராசாவின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளே தவிர, மத்திய அரசின் மீது சுமத்தப்பட்ட பொதுவான குற்றச்சாட்டுகள் அல்ல. அதனால்தான் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புகின்றன. இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாமல், மக்களை திசை திருப்பும் வகையில் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.தமிழக அரசின் ஆண்டு வருவாய் சுமார் |60 ஆயிரம் கோடி. அதைப்போல மூன்று மடங்கு தொகை முறைகேடு செய்யப்பட்டது என்பது சாதாரண விஷயமல்ல என்று   புரட்சிதலைவிஅம்மா தெரிவித்துள்ளார்.

Wednesday, October 27, 2010

வட சென்னை மாவட்ட செயலர் மாற்றம்

சென்னை:வடசென்னை மாவட்ட அ.தி.மு.க. மாவட்டச் செயலர் பதவியிலிருந்துP.K. சேகர்பாபு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, முன்னாள் அமைச்சர்D. ஜெயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க., பொதுச் செயலர் புரட்சிதலைவி அம்மா  வெளியிட்டுள்ள அறிவிப்பு:வடசென்னை மாவட்ட அ.தி.மு.க., செயலர் பதவியில் இருந்து P.K.சேகர்பாபு விடுவிக்கப்படுகிறார். எம்.ஜி.ஆர்., மன்ற மாநிலச் செயலர், திருச்சி மாநகர், திருச்சி புறநகர், பெரம்பலூர் மாவட்டங்களின் பொறுப்பாளர் பதவிகளிலிருந்துD. ஜெயகுமார் விடுவிக்கப்படுகிறார். வடசென்னை மாவட்ட புதிய செயலராகD. ஜெயகுமார் நியமிக்கப்படுகிறார்.திருச்சி மாநகர், திருச்சி புறநகர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களின் பொறுப்பாளராக இலக்கிய அணி மாநில செயலர் வைகைச் செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைச் செயலர் பொறுப்பிற்குP.K. சேகர்பாபு எம்.எல்.ஏ., நியமிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு புரட்சிதலைவி அம்மாஉத்தரவிட்டுள்ளார்.



கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், வடசென்னை மாவட்டத்தில் அடங்கிய சட்டசபை தொகுதிகளில் சில ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தோல்வியடைந்தன.   வடசென்னையை அ.தி.மு.க.,வின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையிலும், வரும் சட்டசபை தேர்தலில் அம்மாவட்டத்தில் அடங்கிய எட்டு சட்டசபை தொகுதிகளையும் அ.தி.மு.க., கைப்பற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக, வடசென்னை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய அ.தி.மு.க., பிரமுகர்களுக்கு புரட்சிதலைவி அம்மா நேற்று முன்தினம் அவசர அழைப்பு விடுத்தார். அவைத்தலைவர் மதுசூதனன், பேரவை மாநில செயலர் நயினார் நாகேந்திரன், எம்.ஜி.ஆர்., மன்ற மாநில செயலர் ஜெயகுமார்,மாவட்டபேரவைதலைவர் கு.சீனிவாசன்,வெற்றிவேல், நீலகண்டன் உள்ளிட்ட சிலரை மட்டும்புரட்சிதலைவி அம்மா அழைத்து பேசினார்.வடசென்னையில் கட்சியை பலப்படுத்த வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற வேண்டும். எனவே, சட்டசபை தொகுதிகளை பொறுப்பேற்று செயல்பட வேண்டும். பேரவை சார்பில் நலத்திட்ட உதவிகளை அனைத்து தொகுதிகளிலும் செய்ய வேண்டும் என புரட்சிதலைவி அம்மா உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்படி, ஆர்.கே.நகர்P.K. சேகர்பாபு, ராயபுரம் D.ஜெயகுமார், திரு.வி.க., நகர்வ. நீலகண்டன், துறைமுகம் கு.சீனிவாசன், பெரம்பூர், வில்லிவாக்கம் P.வெற்றிவேல், மீதமுள்ள எழும்பூர், கொளத்தூர் தொகுதிகளை பக்கத்து தொகுதிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களும் கவனித்துக் கொள்ள வேண்டும் என அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

Thursday, October 21, 2010

புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் தத்துவ பாடல்கள்

MGR Interview

idhayakkani-MGR-"neenga nalla irukkanum"

M G R KOLGAI PADALGAL

Naan Enn Piranthen Songs by Naan Enn Piranthen (1972) tamil video song -...

Unnai arinthal-mgr song.flv

Naalai Namathe - MGR Golden Songs - MSV

Agatumda Thambi Song ( MGR Hits By TMS )

MGR HITS - Anbukku Naan Adimai - Mellisai Mannar M.S.VISWANATHAN MUSIC S...

Naan Anai Ittal Song ( MGR Hits By TMS )

Koduthathellam Song ( MGR Hits By TMS )

Nalla Perai Vaanga (MGR Old Hit Song)

அஞ்சுவதும் இல்லை ! அஞ்ச வருவதும் இல்லை!!-அம்மா

தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர்.ஆட்சியைக் கொண்டு வருவோம்-புரட்சிதலைவிசபதம்

தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர்.ஆட்சியைக் கொண்டு வருவோம்-புரட்சிதலைவிஅம்மாசபதம்

October 15, 2010

1973ம் ஆண்டு மே மாதத்தில் அதிமுக தனது முதல் வெற்றியைக் குவித்தது. அதே மாதத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் மீண்டும் அதிமுக அமோக வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்று புரட்சிதலைவிஅம்மா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை
எம்.ஜி.ஆர். அவர்களால் தமிழக மக்களுக்காக உருவாக்கப்பட்ட அதிமுக தனது 38 வருட வெற்றிப் பயணத்தை நிறைவு செய்து, 17.10.2010 அன்று அகவை 39ல் அடியெடுத்து வைக்கிறது.
சரித்திரத்தின் சக்கரங்களை பின் நோக்கி உருட்டிப் பார்த்தால், கணக்குப் போட்டு பிறக்கின்ற கட்சிகளுக்கு மத்தியில், கணக்கு கேட்டு பிறந்த ஒரே இயக்கம் அதிமுக மட்டும் தான்.
‘ஒரு கூத்தாடியும் அவர் பின்னால் சில நூறு விசிலடிச்சாங் குஞ்சுகளும்’ என்று எள்ளி நகையாடியதை, கழகம் பிறந்த சில மாதங்களிலேயே நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அதிமுக தன் முதல் வெற்றியை பெற்றது.
எஃகுக் கோட்டையாய் கழகத்தைக் கட்டிக் காத்து வந்த எம்.ஜி.ஆர். கழகத்தின் கொள்கை கோட்பாடுகளை பட்டி தொட்டியெங்கும் பரப்புவதற்காக என்னை 1983ல் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக்கி மாநிலம் முழுவதும் வலம் வர வைத்தார்.
இவ்வேளையில், 1984ல் எம்.ஜி.ஆர். நோய்வாய்ப்பட்டு அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, பொதுத் தேர்தல் வந்தது. அப்போது, மக்களிடம் ‘எம்.ஜி.ஆர். ஐஸ் பெட்டியில் இருக்கிறார்’ என்று வதந்திகளை கட்டவிழ்த்துவிட்டார் கருணாநிதி . இது மட்டுமல்லாமல், ‘எனக்கு ஓட்டுப் போடுங்கள், நண்பர் எம்.ஜி.ஆர். உயிரோடு வந்துவிட்டால் அவரிடம் ஆட்சியை ஒப்படைத்துவிடுகிறேன்’ என்றார் கருணாநிதி.
இப்படி, எம்.ஜி.ஆர். அவர்கள் களத்தில் இல்லாத நேரத்தில் நடந்த ஒரு உக்கிரமான போரில், எதிரிகளிடமிருந்து கழகத்தை சேதாரமில்லாமல் கட்டிக் காத்து அவரிடம் ஒப்படைக்கும் பெரும் வாய்ப்பினை உங்கள் சகோதரியாகிய நான் பெற்றேன்.
புரட்சித் தலைவர் நலமாக இருப்பதாகவும், அவர் படுக்கையில் இருந்தபடியே வெற்றி பெற்று, உங்கள் திருமுகம் பார்ப்பதற்கு விரைவில் தமிழகம் திரும்பி வருவார் என்கிற நம்பிக்கையூட்டும் பிரச்சாரத்தையும் தமிழகம் முழுவதும் நான் செய்து வந்ததின் விளைவாக, கருணாநிதியின் பொய்ப் பிரச்சாரம் முறியடிக்கப்பட்டு, அதிமுக அமோக வெற்றியை ஈட்டியது.
பின்னர், 1987 ஆம் ஆண்டு எம்ஜிஆரின் மரணத்தை ஏதுவாக பயன்படுத்திக் கொண்ட கருணாநிதி, கழகத்திற்கு துரோகம் செய்வதற்குக் காத்திருந்த துரோகிகள் சிலரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு கழகத்தை பிளவுபடுத்தினார். மேலும் கட்சியின் தலைமை அலுவலகத்தைப் பூட்டினார். கழகத்தின் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தையும் முடக்கிடச் செய்தார். சிங்கத்தின் குகைக்குள் பிளவு வந்தால் சிறு நரிகள் நாட்டாமையாகிவிடும் என்பது போல், பிளவை பயன்படுத்திக் கொண்டு கருணாநிதி 1989ல் ஆட்சிக்கு வந்தார்.
அதனைத் தொடர்ந்து 1991 தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. பின்னர் கருணாநிதியால் கட்டவிழ்த்து விடப்பட்ட பொய், புரட்டுகளால் 1996ல் அதிமுக ஆட்சியை இழக்க வேண்டிய நிலை உருவானது.
ஆனாலும், மனம் தளர்ந்துவிடாது, செயல் சோர்ந்து போகாது, தொண்டர்களை தட்டிக் கொடுத்து, தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் தொண்டர்களுக்கு ஊட்டி, அதன் மூலம் மீண்டும் கழகத்தை எழுச்சிப் பாதைக்குள் கொண்டு வந்து, 1998ல் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பெரும் வெற்றிகளை குவிக்கச் செய்தேன்.
அதனைத் தொடர்ந்து 2001 சட்டமன்றப் பொதுத் தேர்தலில், கருணாநிதியை வீழ்த்தி, அதிமுக மீண்டும் தமிழகத்தில் மலரச் செய்தது. தமிழகத்தின் நீண்ட கால வளர்ச்சியை மனதில் கொண்டு எண்ணற்ற புரட்சிகர திட்டங்களை தமிழகத்திற்கு தந்தோம்.
இருப்பினும் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி, ஓட்டுக்குப் பணம் என்னும் இழிவான யுக்தியை அறிமுகம் செய்து 2006ல், ஒட்டு போட்ட சட்டை போல் பல கட்சிகளின் துணையோடு ஒரு அரசாங்கத்தை அமைத்தார் கருணாநிதி.
இந்த நான்கரை ஆண்டு காலத்தில், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, மின்கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், சட்டம் ஒழுங்கு சீரழிவு என பல்வேறு பிரச்சினைகளுக்கு தமிழக மக்களை கருணாநிதி ஆளாக்கிவிட்டார்.
இப்படி, எல்லா மட்டங்களிலும் தமிழகத்தை இருள் சூழ வைத்துவிட்ட கருணாநிதியிடமிருந்து தமிழகத்தை மீட்டு, மீண்டும் ஒரு பொற்கால ஆட்சியை தரக்கூடிய வலிமையும், வல்லமையும் கொண்ட ஒரே அரசியல் பேரியக்கம் அதிமுகதான் என்பதில் எள் முனையளவும் ஐயமில்லை.
பள்ளிக் கூடங்களில் சத்துணவு, ஆலயங்களில் அன்னதானம் என்று அன்னமிட்டே வாழும் அதிமுக, தனது முதல் கன்னி வெற்றியை 1973 ல் எந்த மே மாதத்தில் குவித்ததோ, அதே மே மாதத்தில், 2011 ல் அமையப் போகும் புதிய அரசுக்கான சட்டப்பேரவைத் தேர்தலிலும் கருணாநிதியை வீழ்த்தி, எம்.ஜி.ஆரின். ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் உருவாக்கிட இந்நாளில் அனைவரும் சபதமேற்போம் என்று புரட்சிதலைவிஅம்மா கூறியுள்ளார்