சென்னை:வடசென்னை மாவட்ட அ.தி.மு.க. மாவட்டச் செயலர் பதவியிலிருந்துP.K. சேகர்பாபு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, முன்னாள் அமைச்சர்D. ஜெயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க., பொதுச் செயலர் புரட்சிதலைவி அம்மா வெளியிட்டுள்ள அறிவிப்பு:வடசென்னை மாவட்ட அ.தி.மு.க., செயலர் பதவியில் இருந்து P.K.சேகர்பாபு விடுவிக்கப்படுகிறார். எம்.ஜி.ஆர்., மன்ற மாநிலச் செயலர், திருச்சி மாநகர், திருச்சி புறநகர், பெரம்பலூர் மாவட்டங்களின் பொறுப்பாளர் பதவிகளிலிருந்துD. ஜெயகுமார் விடுவிக்கப்படுகிறார். வடசென்னை மாவட்ட புதிய செயலராகD. ஜெயகுமார் நியமிக்கப்படுகிறார்.திருச்சி மாநகர், திருச்சி புறநகர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களின் பொறுப்பாளராக இலக்கிய அணி மாநில செயலர் வைகைச் செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைச் செயலர் பொறுப்பிற்குP.K. சேகர்பாபு எம்.எல்.ஏ., நியமிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு புரட்சிதலைவி அம்மாஉத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், வடசென்னை மாவட்டத்தில் அடங்கிய சட்டசபை தொகுதிகளில் சில ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தோல்வியடைந்தன. வடசென்னையை அ.தி.மு.க.,வின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையிலும், வரும் சட்டசபை தேர்தலில் அம்மாவட்டத்தில் அடங்கிய எட்டு சட்டசபை தொகுதிகளையும் அ.தி.மு.க., கைப்பற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக, வடசென்னை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய அ.தி.மு.க., பிரமுகர்களுக்கு புரட்சிதலைவி அம்மா நேற்று முன்தினம் அவசர அழைப்பு விடுத்தார். அவைத்தலைவர் மதுசூதனன், பேரவை மாநில செயலர் நயினார் நாகேந்திரன், எம்.ஜி.ஆர்., மன்ற மாநில செயலர் ஜெயகுமார்,மாவட்டபேரவைதலைவர் கு.சீனிவாசன்,வெற்றிவேல், நீலகண்டன் உள்ளிட்ட சிலரை மட்டும்புரட்சிதலைவி அம்மா அழைத்து பேசினார்.வடசென்னையில் கட்சியை பலப்படுத்த வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற வேண்டும். எனவே, சட்டசபை தொகுதிகளை பொறுப்பேற்று செயல்பட வேண்டும். பேரவை சார்பில் நலத்திட்ட உதவிகளை அனைத்து தொகுதிகளிலும் செய்ய வேண்டும் என புரட்சிதலைவி அம்மா உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்படி, ஆர்.கே.நகர்P.K. சேகர்பாபு, ராயபுரம் D.ஜெயகுமார், திரு.வி.க., நகர்வ. நீலகண்டன், துறைமுகம் கு.சீனிவாசன், பெரம்பூர், வில்லிவாக்கம் P.வெற்றிவேல், மீதமுள்ள எழும்பூர், கொளத்தூர் தொகுதிகளை பக்கத்து தொகுதிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களும் கவனித்துக் கொள்ள வேண்டும் என அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
Wednesday, October 27, 2010
Thursday, October 21, 2010
Naan Enn Piranthen Songs by Naan Enn Piranthen (1972) tamil video song -...
MGR HITS - Anbukku Naan Adimai - Mellisai Mannar M.S.VISWANATHAN MUSIC S...
அஞ்சுவதும் இல்லை ! அஞ்ச வருவதும் இல்லை!!-அம்மா
தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர்.ஆட்சியைக் கொண்டு வருவோம்-புரட்சிதலைவிசபதம்
தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர்.ஆட்சியைக் கொண்டு வருவோம்-புரட்சிதலைவிஅம்மாசபதம்
October 15, 2010

1973ம் ஆண்டு மே மாதத்தில் அதிமுக தனது முதல் வெற்றியைக் குவித்தது. அதே மாதத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் மீண்டும் அதிமுக அமோக வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்று புரட்சிதலைவிஅம்மா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை
எம்.ஜி.ஆர். அவர்களால் தமிழக மக்களுக்காக உருவாக்கப்பட்ட அதிமுக தனது 38 வருட வெற்றிப் பயணத்தை நிறைவு செய்து, 17.10.2010 அன்று அகவை 39ல் அடியெடுத்து வைக்கிறது.
சரித்திரத்தின் சக்கரங்களை பின் நோக்கி உருட்டிப் பார்த்தால், கணக்குப் போட்டு பிறக்கின்ற கட்சிகளுக்கு மத்தியில், கணக்கு கேட்டு பிறந்த ஒரே இயக்கம் அதிமுக மட்டும் தான்.
‘ஒரு கூத்தாடியும் அவர் பின்னால் சில நூறு விசிலடிச்சாங் குஞ்சுகளும்’ என்று எள்ளி நகையாடியதை, கழகம் பிறந்த சில மாதங்களிலேயே நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அதிமுக தன் முதல் வெற்றியை பெற்றது.
எஃகுக் கோட்டையாய் கழகத்தைக் கட்டிக் காத்து வந்த எம்.ஜி.ஆர். கழகத்தின் கொள்கை கோட்பாடுகளை பட்டி தொட்டியெங்கும் பரப்புவதற்காக என்னை 1983ல் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக்கி மாநிலம் முழுவதும் வலம் வர வைத்தார்.
இவ்வேளையில், 1984ல் எம்.ஜி.ஆர். நோய்வாய்ப்பட்டு அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, பொதுத் தேர்தல் வந்தது. அப்போது, மக்களிடம் ‘எம்.ஜி.ஆர். ஐஸ் பெட்டியில் இருக்கிறார்’ என்று வதந்திகளை கட்டவிழ்த்துவிட்டார் கருணாநிதி . இது மட்டுமல்லாமல், ‘எனக்கு ஓட்டுப் போடுங்கள், நண்பர் எம்.ஜி.ஆர். உயிரோடு வந்துவிட்டால் அவரிடம் ஆட்சியை ஒப்படைத்துவிடுகிறேன்’ என்றார் கருணாநிதி.
இப்படி, எம்.ஜி.ஆர். அவர்கள் களத்தில் இல்லாத நேரத்தில் நடந்த ஒரு உக்கிரமான போரில், எதிரிகளிடமிருந்து கழகத்தை சேதாரமில்லாமல் கட்டிக் காத்து அவரிடம் ஒப்படைக்கும் பெரும் வாய்ப்பினை உங்கள் சகோதரியாகிய நான் பெற்றேன்.
புரட்சித் தலைவர் நலமாக இருப்பதாகவும், அவர் படுக்கையில் இருந்தபடியே வெற்றி பெற்று, உங்கள் திருமுகம் பார்ப்பதற்கு விரைவில் தமிழகம் திரும்பி வருவார் என்கிற நம்பிக்கையூட்டும் பிரச்சாரத்தையும் தமிழகம் முழுவதும் நான் செய்து வந்ததின் விளைவாக, கருணாநிதியின் பொய்ப் பிரச்சாரம் முறியடிக்கப்பட்டு, அதிமுக அமோக வெற்றியை ஈட்டியது.
பின்னர், 1987 ஆம் ஆண்டு எம்ஜிஆரின் மரணத்தை ஏதுவாக பயன்படுத்திக் கொண்ட கருணாநிதி, கழகத்திற்கு துரோகம் செய்வதற்குக் காத்திருந்த துரோகிகள் சிலரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு கழகத்தை பிளவுபடுத்தினார். மேலும் கட்சியின் தலைமை அலுவலகத்தைப் பூட்டினார். கழகத்தின் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தையும் முடக்கிடச் செய்தார். சிங்கத்தின் குகைக்குள் பிளவு வந்தால் சிறு நரிகள் நாட்டாமையாகிவிடும் என்பது போல், பிளவை பயன்படுத்திக் கொண்டு கருணாநிதி 1989ல் ஆட்சிக்கு வந்தார்.
அதனைத் தொடர்ந்து 1991 தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. பின்னர் கருணாநிதியால் கட்டவிழ்த்து விடப்பட்ட பொய், புரட்டுகளால் 1996ல் அதிமுக ஆட்சியை இழக்க வேண்டிய நிலை உருவானது.
ஆனாலும், மனம் தளர்ந்துவிடாது, செயல் சோர்ந்து போகாது, தொண்டர்களை தட்டிக் கொடுத்து, தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் தொண்டர்களுக்கு ஊட்டி, அதன் மூலம் மீண்டும் கழகத்தை எழுச்சிப் பாதைக்குள் கொண்டு வந்து, 1998ல் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பெரும் வெற்றிகளை குவிக்கச் செய்தேன்.
அதனைத் தொடர்ந்து 2001 சட்டமன்றப் பொதுத் தேர்தலில், கருணாநிதியை வீழ்த்தி, அதிமுக மீண்டும் தமிழகத்தில் மலரச் செய்தது. தமிழகத்தின் நீண்ட கால வளர்ச்சியை மனதில் கொண்டு எண்ணற்ற புரட்சிகர திட்டங்களை தமிழகத்திற்கு தந்தோம்.
இருப்பினும் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி, ஓட்டுக்குப் பணம் என்னும் இழிவான யுக்தியை அறிமுகம் செய்து 2006ல், ஒட்டு போட்ட சட்டை போல் பல கட்சிகளின் துணையோடு ஒரு அரசாங்கத்தை அமைத்தார் கருணாநிதி.
இந்த நான்கரை ஆண்டு காலத்தில், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, மின்கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், சட்டம் ஒழுங்கு சீரழிவு என பல்வேறு பிரச்சினைகளுக்கு தமிழக மக்களை கருணாநிதி ஆளாக்கிவிட்டார்.
இப்படி, எல்லா மட்டங்களிலும் தமிழகத்தை இருள் சூழ வைத்துவிட்ட கருணாநிதியிடமிருந்து தமிழகத்தை மீட்டு, மீண்டும் ஒரு பொற்கால ஆட்சியை தரக்கூடிய வலிமையும், வல்லமையும் கொண்ட ஒரே அரசியல் பேரியக்கம் அதிமுகதான் என்பதில் எள் முனையளவும் ஐயமில்லை.பள்ளிக் கூடங்களில் சத்துணவு, ஆலயங்களில் அன்னதானம் என்று அன்னமிட்டே வாழும் அதிமுக, தனது முதல் கன்னி வெற்றியை 1973 ல் எந்த மே மாதத்தில் குவித்ததோ, அதே மே மாதத்தில், 2011 ல் அமையப் போகும் புதிய அரசுக்கான சட்டப்பேரவைத் தேர்தலிலும் கருணாநிதியை வீழ்த்தி, எம்.ஜி.ஆரின். ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் உருவாக்கிட இந்நாளில் அனைவரும் சபதமேற்போம் என்று புரட்சிதலைவிஅம்மா கூறியுள்ளார்
Subscribe to:
Comments (Atom)