அ.தி.மு.க. பொதுச் செயலாளர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளை யொட்டி வட சென்னை மாவட்டம் துறைமுகம் பகுதி கழகம் சார்பில் தம்பு செட்டி தெருவில் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கும் விழாவும், பொதுக்கூட்டமும் நடந்தது.நிகழ்ச்சிக்கு கு. சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் ஏழை பெண்கள் 2 ஆயிரம் பேருக்கு இலவச சேலை, 13 பேருக்கு தையல் எந்திரங்கள், 13 பேருக்கு இட்லி குக்கர் மற்றும் மீன்பாடி வண்டிகள், கிரைண்டர்கள் வழங்கப்பட்டன.
விழாவில் தலைமை நிலயசெயளாலர் செங்கோட்டையன் பேசியதாவது:-
வருகிற சட்டசபை தேர்தலில் சரியான கூட்டணி அமையும். சென்னை அ.தி.மு.க. கோட்டையாக மாறும். அந்த அளவுக்கு புரட்சித்தலைவி புகழ்பெற்று விட்டார்.புரட்சித்தலைவி ஆட்சி காலத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக இருந்தது. ஆனால் தற்போது சீர்கெட்டு விட்டது.
மாணவர்கள் பணத்திற்காக கடத்தப்படுகிறார்கள். தனி மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும். ஜெயலலிதா ஆட்சியில் மின் தட்டுப்பாடு கிடையாது. இப்போது தட்டுப்பாடு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில்அவை தலைவர் இ.மதுசூதனன் பேசியதாவது:-
புரட்சித்தலைவி பிறந்தநாளை யொட்டி அவரது உத்தரவுக்கு ஏற்ப இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது. சுனாமி வந்த நேரத்தில் 1 மணி நேரத்தில் மீனவ மக்களுக்கு புரட்சித்தலைவிஅம்மா உதவ சென்றார். மக்களுக்கு தொண்டு செய்யும் தலைவி புரட்சித்தலைவிஅம்மா தான். எனவே மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க.தான் ஆட்சிக்கு வரும்.
விழாவில் நடிகர் ராதாரவி பேசியதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பெருந்தன்மை உள்ள தலைவர். உண்மையை சொல்கிறவர்களுக்கு ஞாபகசக்தி தேவை இல்லை.
நமக்கு இனி வெற்றி கிடைக்கும் என தொண்டர்கள் நினைக்கவேண்டும். தற்போது காங்கிரஸ் கட்சி தவியாய் தவிக்கிறது. அவர்கள் அ.தி.மு.க. பக்கம் வந்தால் அவர்களுக்கு நல்லது. அடுத்து வருவது அ.தி.மு.க. ஆட்சிதான்.
விஜயகாந்த், சரத்குமார்,புரட்சித்தலைவிஅம்மா சிறப்பானவர் என கருத தொடங்கி விட்டனர். அவர்கள் அ.தி.மு.க. பக்கம் வந்தால் அவர்களுக்கும் நல்லது.
தற்போது குழந்தைகளுடன் பெற்றோர்களும் பள்ளிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. கொலை, கொள்ளை நடக்கிறது. சினிமா நடிகர்கள் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். நடிகர் விஜய் அ.தி.மு.க. பக்கம் வர இவ்வளவு யோசிப்பது ஏன் என்று தெரியவில்லை.
60 டைரக்டர்கள், 200 தியேட்டர் உரிமையாளர்கள் அ.தி.மு.க.வில் சேர உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பாலகங்கா, வி.பி. கலைராஜன், வ. நீலகண்டன், பி. வெற்றிவேல், ஆர்.டி. சாம்சன், செல்லப்பன்,கொளத்துர் D.கிருஷ்னமூர்த்தி. உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment