ம. கோ. இராமச்சந்திரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் | |
|---|---|
மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் | |
| பிறப்பு | ஜனவரி 17, 1917 நாவலப்பிட்டி, |
| இறப்பு | டிசம்பர் 24, 1987 தமிழ்நாடு, |
| தொழில் | நடிகர், அரசியல்வாதி |
| வாழ்க்கைத் துணை | தங்கமணி, சதானந்தவதி, வி. என். ஜானகி |
| பிள்ளைகள் | கிடையாது |
எம்ஜிஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (ஜனவரி 17, 1917 - டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்படநடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரைதமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர்.
பொருளடக்கம்[மறை] |
[தொகு]இளமைப்பருவம்
இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்குஅருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார்.[1][2] அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின்னர்தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். நாடகத்துறையில் நன்குப் அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார். இவர் தங்கமணியை மணந்தார் இவர் நோய்க்காரணமாக இறந்தார். அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் இவரும் நோய்க் காரணமாக இறந்தார். பின்னர் இவர் வி.என்.ஜானகியை மணந்துக்கொண்டார். இவருக்கு பிள்ளைகள் கிடையாது.[3]
[தொகு]திரைப்பட வாழ்க்கை
1936 ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை.
தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.
இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது.
நல்ல குணங்கள் நிறைந்த கதா பாத்திரங்களையே தேர்வு செய்து நடித்தார். அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். பிரபல நாவலாசிரியர் அகிலன் எழுதி கல்கி இதழில் தொடராக வெளிவந்த கயல்விழி என்னும் புதினத்தின் அடிப்படையிலானது இது.
தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்:நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார்.
[தொகு]அரசியல் வாழ்க்கை
இவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும்,திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். சி. என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலையை ஏற்படுத்தின. 1972 ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார்.
திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977ல் இடம் பெற்ற தேர்தலில் பெரு வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். அவர் மறைவிற்குப் பின்பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கையைப் பின்பற்றினாலும் தமிழ் நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள்.[4] இவர் இறந்து, 22 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த அளவு கடந்த செல்வாக்கையே காட்டுகிறது.
[தொகு]தமிழ் ஈழத்திற்கு உதவி
1980களில் ஈழப்போராட்டம் தீவிரமடைந்த போது அதற்கு ஆதரவளித்தார் எம். ஜி. ஆர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிரபாகரன் தலைமையில் தமிழர்களுக்கென்று தனி நாடு அமைய வேண்டுமென்றும் அவர் விரும்பினார் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். விடுதலைப் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் வெளிப்படையான ஆதரவு அளித்தார்.
பிரபாகரனின் தலைமையிலான புலிகளின் போராட்டத்துக்குத் தேவையான ஆயுதங்கள் வாங்க ரூ.7 கோடி சொந்தப் பணத்தை தந்தார் என நெடுமாறன் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் உயிர் பிரிவதற்கு ஒரு வாரம் முன்புகூட ரூ. 40 லட்சம் வரை புலிகளுக்கு உதவியாக வழங்கியதாக பிரபாகரனே கூறியுள்ளார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிரபாகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் ”தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பிய மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்” என்று கூறியுள்ளார்.[5]
[தொகு]எம்.ஜி.ஆர். நடித்த குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்
- ராஜ ராஜன்
- ராஜகுமாரி
- மன்னாதி மன்னன்
- மந்திரி குமாரி
- திருடாதே
- மலைக்கள்ளன்
- அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (திரைப்படம்)
- மதுரை வீரன்
- புதுமைப்பித்தன் (திரைப்படம்)
- ஆயிரத்தில் ஒருவன்
- அன்பே வா
- எங்க வீட்டுப் பிள்ளை
- நாடோடி மன்னன்
- படகோட்டி
- ரிக்ஷாக்காரன்
- உலகம் சுற்றும் வாலிபன்
- ராமன் தேடிய சீதை
- அடிமைப்பெண்
[தொகு]சிறப்பு விருதுகளும் பட்டங்களும்
எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும்.
[தொகு]விருதுகள்
- பாரத் விருது - இந்திய அரசு
- அண்ணா விருது - தமிழ்நாடு அரசு
- பாரத ரத்னா விருது - இந்திய அரசு
- பத்மஸ்ரீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு)
- சிறப்பு டாக்டர் பட்டம் - அமெரிக்கா அரிசோனா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு)
- வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.
[தொகு]திரைச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்
- இதயக்கனி - அறிஞர் அண்ணா
- புரட்சி நடிகர் - கலைஞர் மு. கருணாநிதி
- நடிக மன்னன் - சென்னை ரசிகர்கள் (சி.சுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்டது.)
- மக்கள் நடிகர் - நாகர்கோவில் ரசிகர்கள்
- பல்கலை வேந்தர் - சிங்கப்பூர் ரசிகர்கள்
- மக்கள் கலைஞர் - காரைக்குடி ரசிகர்கள்
- கலை அரசர் - விழுப்புரம் முத்தமிழ்க் கலை மன்றம்
- கலைச்சுடர் - மதுரை தேகப்பயிற்சிக் கலை மன்றம்
- கலை மன்னர் - நீதிபதி ராஜமன்னார்
- கலை மன்னன் - சென்னை ரசிகர்கள்
- கலை வேந்தர் - மலேசிய ரசிகர்கள்
- திரை நாயகன் - சேலம் ரசிகர்கள்
[தொகு]பொதுச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்
- கொடுத்து சிவந்த கரம் - குடந்தை ரசிகர்கள்
- கலியுகக் கடவுள் - பெங்களூர் விழா
- நிருத்திய சக்கரவர்த்தி - இலங்கை ரசிகர்கள்
- பொன்மனச் செம்மல் - கிருபானந்த வாரியார்
- மக்கள் திலகம் - தமிழ்வாணன்
- வாத்தியார் - திருநெல்வேலி ரசிகர்கள்
- புரட்சித்தலைவர் - கட்சித் தோழர்கள்
- இதய தெய்வம் - தமிழ்நாடு பொதுமக்கள்
- மக்கள் மதிவாணர் - இரா. நெடுஞ்செழியன்
- ஆளவந்தார் - ம. பொ. சிவஞானம்
[தொகு]நினைவிடம்
தமிழ்நாடு அரசு ம.கோ.இராமச்சந்திரன் நினைவாக சென்னையில் மெரினா கடற்கரையில் அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்தை அவரது நினைவிடமாகப் போற்றி டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களும், அவருடைய சில பொருட்களும் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
[தொகு]இவற்றையும் பார்க்கவும்
[தொகு]ஆதாரங்கள்
- ↑ எம்.ஜி.ஆர். வாழ்கை
- ↑ எல்.ஆர்., ஜெகதீசன்."ஆளும் அரிதாரம்", பி. பி. சி.. 2006-11-08 அன்று தகவல் பெறப்பட்டது.(தமிழ்)
- ↑ வாழ்க்கைக் குறிப்பு
- ↑ எல்.ஆர்., ஜெகதீசன்."ஆளும் அரிதாரம்", பி.பி.சி.. 2006-11-08 அன்று தகவல் பெறப்பட்டது. “திரைப்படத்தில் தாங்கள் பார்க்கும் கதாநாயக நாயகிகளின் பிம்பங்களை நிஜ வாழ்வில் ஆராதிக்கும் மனோபாவம் தமிழர்கள் மத்தியில் சற்றே அதிகம் என்பது சமூகவியலாளர்களின் கருத்து. எம்.ஜி.ஆர் எனப்படும் மருதூர் கோபால மேனன் இராமச்சந்திரனுக்கு கோயில் கட்டும் அளவுக்கு சிலர் சென்றதற்கும் இதுவே காரணம்.”
- ↑ * பழ.நெடுமாறன் மற்றும் பிரபாகரன்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]எம்.ஜி.ஆருக்கான தனி இணையதளங்கள்
[தொகு]அரசியல் குறிப்புகள்
- அ.தி.மு.க இணையத்தளம்
- எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்திருந்தால் எப்போதோ ஈழத்தமிழருக்கு தீர்வு ஏற்பட்டிருக்கும்
- பிரபாகரனை மகனாகக் கருதி உதவிய தமிழக முன்னாள முதலமைச்சர் எம்.ஜி.ஆர் : பழ.நெடுமாறன்
[தொகு]திரைப்பட வாழ்க்கை
- 'கண்டிக் கர்ணன்' எம்.ஜி.ஆர் - யாழ் சுதாகர்
- மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த பாடல் காட்சிகளில் இருந்து எடுக்கப்பட்ட வசீகரமான புகைப் படங்களின் தொகுப்பு
- எம்.ஜி.ஆர். திரைப்பட பாடல்கள்
No comments:
Post a Comment